|
|
|
:..: பெரியவன் யார் .:. ஒரு
சமயம் பிரபஞ்ச உயிர்களை பிரசவிக்கின்ற பிரம்மாவிற்கு தன் படைப்புத்
தொழிலின் மீது ஏற்பட்ட அதீத கர்வம் காரணமாக தனக்குள்ளே ஆணவம்
பற்றிக்கொண்டது. உலகிலே மிக முக்கியமாக மூன்று தொழில்களையும் செய்கின்ற
மும்மூர்த்திகளிலும் நானே பெரியவன் என இறுமாப்பு ஏற்பட்டுவிட்டது. இதை
எவ்வாறு நிறுவுவது என்றவாறே தன் மனைவியாகி அன்னை சரஸ்வதிதேவியிடம் " இந்த உலகத்திலே படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை செய்கின்ற மும் முர்த்திகளில் யார் பெரியவன் என்று நீ நினைக்கின்றாய் ?" பிரம்மா தேவியிடம் இவ்வினாவை தொடுத்தார். உடனே தேவி " அதிலென்ன சந்தேகம் இவ்வுலக நியதியாகிய அத்தொழில்களில் படைத்தலையும் அழித்தலையும் இருந்த இடத்தில் இருந்தவாறே செய்து கொள்ள முடியும் ஆனால் காத்தல் அப்படி இல்லை என்நேரமும் ஜீவராசிகளுடன் ஒன்றித்திருந்து செய்யவேண்டிய அந்த சிரமமான தொழிலை செய்கின்ற விஷ்னுதான் பெரியவர்" என்றாள் தேவி. பிரம்மாவின் கோபம் இருமடங்கானது " என்ன படைத்தலை விட காத்தல் அவ்வளவு பெரிய காரியமா ? நான் படைக்காவிடில் அவரால் எப்படி காக்க முடியும்? " வார்த்தைகள் வீறிட்டன. தேவி எதுவும் பேசாது மௌனித்துப்போனாள். " உன்னிடம் எனக்கு என்ன பேச்சு நான் இப்பொழுதே விஷ்னுவை சந்திக்கிறேன் என்றவாறே விஷ்னுவிடம் புறப்பட்டார் பிரம்மா. பாற்கடலில் துயின்றுகொண்டிருந்த விஷ்னு பகவான் பிரம்மாவை கண்டதும் எழுந்து வரவேற்றார். ஆனால் பிரம்மாவிடம் இந்த வரவேற்புக்கான எதிர் பிரதிபலிப்பு எதுவும் இருக்கவில்லை. விஷ்னு பிரம்மாவின் சங்கடத்தைப்புரிந்து கொண்டவா எனினும். பிரம்மாவிடம் இருந்து வரும்வரை நிதானமாகவே இருந்தார்." இவ்வுலக ஜீவராசிகளை படைக்கின்ற என் தொழிலிலும் உன் தொழில் சிறந்ததா? என்ற பிரம்மாவை நோக்கி விஷ்னு "இதிலென்ன சந்தேகம் காத்தல் தான் மிகவும் சிறந்தது என தேவி கூறிய அதே விளக்கத்தைக் சொன்னார். பிரம்மாவினால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை விஷ்னுவுடன் சண்டையிடும் அளவிற்கு நிலமை சிக்கலானது. இதைப்புரிந்து கொண்ட நம் இறைவனாகிய சிவபெருமான் இருவருக்கும் இடையில் பாரிய தீப்பிளம்பாக உருவெடுத்தார். இப்பொழுது அசரீரி ஒன்று ஒலித்தது இருவரமே அண்ணாந்து பார்த்தனர்." என் அடியையும் முடியையும் காண்பவரே பெரியவர்" என்றது அவ் அசரீரி. உடனே பிரம்மா முடியைத் தேடி புறப்பட்டு விட்டார். விஷ்னு அடியினைத்தேடி புறப்பட்டார். நெடுநாட்கள் கழிந்தது பிரம்மா பயணித்துக்கொண்டே இருக்கிறார். முடி தென்படுவதாக தெரியவில்லை. அடியினைத்தேடிச்சென்ற விஷ்னு சிவபெருமானின் பாதர விந்தங்களை காணாது இளைத்திருந்தார். இருவருமே
இயலாது மறுபடியும் தம்மிடம் திரும்பினர். ஒளியாக இருந்த இறைவனை வணங்கி
தங்கள் தவறுக்காக தலை குனிந்து நின்றனர். ஒளிப்பிளம்பு மறைந்து இறைவன்
தோன்றினார். "உங்களில் இருவருமே சிறப்பானவர்தான் இதில் யார் பெரியவர்
என்பது தேவையில்லை" என்றவாறு அவ்விடத்தை விட்ட மறைந்தார் இறைவன். உலக இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வினையும் செயற்படுத்துகின்ற நம் இறைவன் அனைத்து வல்லமைகளும் வாய்க்கப்பெற்ற தலைவன். அவனின்றி அணுவும் அசைய முடியாது என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் உண்மை. அப்போதுதான் நம்மில் யார் பெரியவன் என்கிற மாயயை நம்மால் விரட்ட முடியும். |
|
|
|
நேர்மையின் செல்வன் :::.
இந்தியாவிலே ஒரு சிறிய ஊர் பண்டரிபுரம்
என்பது அங்கே கோபாலகிரி என்ற இடத்திலே சந்திராவளி என்பவள் ஆண்டாளைப்போல் !
கிருஷ்ணனையே திருமணம் புரிந்துகொள்ளவேண்டுமென்று மிக வைராக்கியமாக
இருந்தாள். அது நடக்கக்கூடிய காரியமா? என ஊரார் திடீரென சிவன் உருவத்தில் நின்ற கிருஷ்ணர் கிருஷ்ணராகக் காட்சிகொடுத்தார்." சந்திராவளியே உன் கற்பின் சிறப்பை அறியவே அவ்வுருவில் வந்தேன்" என்றார் கிருஷ்ணர். இந்தச்சமையத்தில் அங்கு ருக்மினி தோன்றினாள். நடந்ததையும் நடக்க இருப்பதையும் உணர்ந்துகொண்ட அவள் கிருஷ்ணன் மீது அளவுகடந்த கோபம் கொண்டாள். உடனேயே அவ்விடத்தைவிட்டு அகன்றோடினாள். கோபமிகுதியால் அகன்ற ருக்மினிதேவியைத்தேடி கிருஷ்ணபரமாத்மா புறப்பட்டார். இவ்வாறு தேடிக்கொண்டே சந்திரபாகா நதிக்கரையை அடைந்தார் கிருஷ்ணர். அங்கே ; தனது தாய்தந்தையருக்குச் சேவை செய்துகொண்டிருந்த
பிராமணன் ஒருவனைக் கண்டார். அவனிடம் சென்று அன்பனே நீ உன் தாய்தந்தையர் மீது கொண்டுள்ள அன்பினை மெச்சினேன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன்" என்றார். உடனே அப்பிராமணன் " தாங்கள் யார் என்று நான் அறியலாமா?" என்றான். இதற்கு" நானே கிருஷ்ணபரமாத்மா?" என்ற பதில் கிடைத்தது. உடனே அவரை வணங்கியவனாய் இறைவனே என் தாய்தந்தையர் நீராடிமடித்துவிட்டனர் அவர்களை வீட்டில் விட்டு அவர்கழுக்கு வேண்டிய பணிவிடைசெய்துவிட்டு வருகிறேன் அதுவரை தாங்கள் இவ்விடத்தில் காத்திருக்க வேண்டுகிறேன்" என்றான். கருணையே வடிவமான
கிருஷ்ணபரமாத்மாவும்" சரி சென்றுவா நீ வரும்வரை இவ்விடத்திலேயே
காத்திருப்பேன்" என்று வாக்குக்கொடுத்து அனுப்பிவைத்தார். தனது பெற்றோரை
வீட்டிற்கு அழைத்துச்சென்ற பிராமணன் அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச்
செய்து முடித்த பின்பு " அன்னையே எனக்கு வரம் நல்குவதற்காக
கிருஷ்ணபரமார்த்மா சந்திரபாகா நதிக்கரையில் காத்திருக்கிறார். நான்
சென்றுவரம் பெற்று வரட்டுமா?" என்றான். அதற்கு இத்தாய்" மகனே நீ மட்டும்
அவரை வணங்கினால் போதுமா எல்லோரும் அவரை தரிசிக்கும் படியான ஒரு வரத்தைக்
கேள்..." என்று கூறி அனுப்பிவைத்தாள். வரும் வளியிலேயே தன்நடை தளர
அப்பிராமணன் கிருஷ்ணனை நோக்கி தன் கரங்களை கூப்பியவாறே சமாதியடைந்தான்.
இதையறியாத கிருஷ்ணர் தன் பக்தனுக்காயும் தான் கொடுத்த வாக்குறுதிக்காயும்
அவ்விடத்தில் பலநாட்கள் காத்திருந்தார்.இன்றும் இவ்வூரில் அவர் காத்திருந்த
இடத்தில் அவருடைய சிலை உள்ளதைக் காணலாம். தன் அடியார்கள் மீது இறைவன் அளவுகடந்த அன்பினைப் பகிர்ந்து கொள்பவன். என்றும் எம் கடமையினைச் சிறப்பிக்க அவனுடைய பிரசன்னம் எம் எல்லோர் வாழ்விலும் ஒருநாள் நிச்சையம் கைகூடவே உள்ளது. உங்கள் கடமைகளை இனிதே செய்யுங்கள் இறைவன் உங்களைத்தேடியே வருவான்... |
|
|
|
மணுக்குலத்தின் மைந்தன்...
அடர்ந்த அக் காட்டின் வழியாக நடந்து
கொண்டிருந்தான் அர்ச்சுணன். எப்படியாவது பாசுபதத்தினைப் பெற்று துரியோதனனை
தோற்கடித்துவிட வேண்டும் என்பதே அவனது அவாவாக இப்பொழுது இருந்தது. கடும்
தவம் செய்து பாசுபதத்தினை பெறுவதற்கே அவன் இப்பொழுது சென்று
கொண்டிருக்கிறான். வளியில் எதிர்பாராத விதமாக அனுமனை "இராமா... இராமா... இராமா..." என்ற நாமம் அவ்வடர்ந்த காட்டின் அயலெங்கும் காற்றுடன் நாதமிடுகின்றது. அருச்சுணனால் அதற்கு மேல் பொறுக்கமுடியவில்லை. அனுமர் இருந்த இடத்தை வந்தடைந்தான். "யார் நீ எதற்காக இராமா.. இராமா... என இவ்வளவு அலாதிப்பட்டு அலறுகிறாய்...?" என அனுமனை நோக்கி வினாவினைத் தொடுத்தான் அருச்சுணன். அனுமர் இப்பொழுது இராம நாமத்தை உச்சரிப்பதை நிறுத்தினார். "இராமர் என்பது எனது தேவனுடைய நாமம் அவரையே நான் தினமும் அழைக்கிறேன்.. இதில் உங்களுக்கு என்ன சிரமம்?" அனுமரின் விடையுடன் கேள்வியும் வந்தது. "இராமர் என்பது கடவுளா...? என்ன பிதற்றுகிறாய் நான் இதுவரைக்கும் அப்படி ஒரு தெய்வத்தினை கேள்விப்பட்டதே இல்லையே.... நான் தினமும் வணங்கும் கண்ணனை தவிர ஒரு தெய்வம் உண்டோ...? என கண்ணனின் மகிமையினை முன்னிறுத்தி நின்றான் அருச்சுணன். இதில் என்ன ஆச்சரியம் என்றால் இருவருமே நாராயணனின் பக்தர்கள் தான் ஆனால் வேறுவேறு அவதாரங்களில் நாராயணனை துதிக்கின்றவர்கள். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியது. "எங்கே உன்னுடைய இறைவனின் பலத்தினை நிரூபிப்பதற்கு நீ இந்தப் பெரிய ஆற்றினைக் கடப்பதற்காக ஒரு பாலத்தினை உன் அம்பினால் அமைத்துக்காட்டு என்றான் அருச்சுணன். அனுமரும் இராம நாமத்தை நெஞ்சில் நிறுத்தி அம்பினை எய்தார். பாலம் அமைந்தது. பாலத்தின் மீது அருச்சுணன் ஏறிக்குதித்தான் பாலம் உறுதியாக இருந்தது. இப்பொழுது அருச்சுணன் பாலம் அமைக்க வேண்டும் தன் திறமையில் அதிகம் நம்பிக்கை கொண்ட அருச்சுணன் வில்லை எடுத்து அம்பு தொடுத்தான். பாலம் உருவானது அனுமர் அதில் தனது ஒரு காலினை ஊன்றியதும் அது உடைந்து நொருங்கியது. அருச்சுணனுக்கு தூக்கிப்போட்டது.
இப்பொழுது கண்ணனை நினைத்துப் புலம்ப ஆரம்பித்தான். நாராயணன் அவர்கள் முன்
தோன்றினான். அருச்சுணனுக்கு உண்மையை விளக்கியான். அனுமனிடம் அருச்சுண்
பற்றியும் அவனின் அறியாமை பற்றியும் எடுத்துக் கூறியவர் அருச்சுணனுக்கு
அவன் வந்ததன் நோக்கத்தினை ஞாபகப்படுத்தி அவ்விடத்தினை விட்டு மறைந்தார். நாம் இறைவனை மறந்து செய்கின்ற ஒவ்வொரு செயல்களையும் நம் இறைவன் இரசித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார். அவை பொய்த்து விடுகின்ற போதுதான் நாம் இறைவனை தேடுகின்றோம் என்பதை அறிந்த இறைவன் நாம் தன்னை பூரண சரணாகதி அடையும் வரை எம்மிடம் வருவதற்குத் தயங்குகிறார். என்று அவனே சரணம் என எம் ஆத்மா அவனிடம் பூரண சரணாகதி அடைகின்றதோ அன்று நம்மை முழுவதுமாக இரட்சிப்பதற்கு அந்த வெங்கடேசன் அவதரிக்கின்றான். உங்கள் மனங்களை அவனிடம் அர்ப்பணியுங்கள் அடைக்கலம் தர வள்ளல் பூமி வரக் காத்திருக்கிறான். |
|
|
|
:::: படியளக்கின்றார் ::::...
இந்திரப்பர்வத்தின் உச்சியிலே இருந்தவாறே
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் உலக மாதாவாகிய அன்னை பார்வதிதேவி.
"இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் எம் இறைவன் எவ்வாறோ
படியளந்து விடுகின்றாரே. |