|
:..:
பெரியவன்
யார் .:.

ஒரு சமயம்
பிரபஞ்ச
உயிர்களை
பிரசவிக்கின்ற
பிரம்மாவிற்கு
தன்
படைப்புத்
தொழிலின்
மீது ஏற்பட்ட
அதீத கர்வம்
காரணமாக
தனக்குள்ளே
ஆணவம்
பற்றிக்கொண்டது.
உலகிலே மிக
முக்கியமாக
மூன்று
தொழில்களையும்
செய்கின்ற
மும்மூர்த்திகளிலும்
நானே
பெரியவன் என
இறுமாப்பு
ஏற்பட்டுவிட்டது.
இதை எவ்வாறு
நிறுவுவது
என்றவாறே தன்
மனைவியாகி
அன்னை
சரஸ்வதிதேவியிடம்
வந்தடைந்தார்
பிரமா.
பிரம்மாவின்
கண்களில்
ஆணவத்தீ
பற்றி எரிவதை
புரிந்து
கொண்டாலும்
அதைக்காட்டிக்கொள்ளாத
தேவி அவரிடம்
" என்ன
என்றும்
இல்லாத
வித்தியாசம்
ஒன்று
உங்களில்
இன்று
தென்படுகின்றதே
என்ன காரணம்
? "
எனக்கேட்டுக்கொண்டாள்.
சீறிடும்
வார்த்தைகள்
பிரமாவிடம்
இருந்து
புறப்பட்டன.
இது முன்பே
எதிர்பார்த்ததது
ஆகையால்
நிதானமாகவே
அதை
செவிமடுத்தாள்
தேவி.
" இந்த
உலகத்திலே
படைத்தல்
காத்தல்
அழித்தல்
தொழில்களை
செய்கின்ற
மும்
முர்த்திகளில்
யார்
பெரியவன்
என்று நீ
நினைக்கின்றாய்
?" பிரம்மா
தேவியிடம்
இவ்வினாவை
தொடுத்தார்.
உடனே தேவி "
அதிலென்ன
சந்தேகம்
இவ்வுலக
நியதியாகிய
அத்தொழில்களில்
படைத்தலையும்
அழித்தலையும்
இருந்த
இடத்தில்
இருந்தவாறே
செய்து கொள்ள
முடியும்
ஆனால்
காத்தல்
அப்படி இல்லை
என்நேரமும்
ஜீவராசிகளுடன்
ஒன்றித்திருந்து
செய்யவேண்டிய
அந்த சிரமமான
தொழிலை
செய்கின்ற
விஷ்னுதான்
பெரியவர்"
என்றாள்
தேவி. ி.
பிரம்மாவின்
கோபம்
இருமடங்கானது
" என்ன
படைத்தலை விட
காத்தல்
அவ்வளவு
பெரிய
காரியமா ?
நான்
படைக்காவிடில்
அவரால்
எப்படி காக்க
முடியும்? "
வார்த்தைகள்
வீறிட்டன.
தேவி எதுவும்
பேசாது
மௌனித்துப்போனாள்.
" உன்னிடம்
எனக்கு என்ன
பேச்சு நான்
இப்பொழுதே
விஷ்னுவை
சந்திக்கிறேன்
என்றவாறே
விஷ்னுவிடம்
புறப்பட்டார்
பிரம்மா.
பாற்கடலில்
துயின்றுகொண்டிருந்த
விஷ்னு
பகவான்
பிரம்மாவை
கண்டதும்
எழுந்து
வரவேற்றார்.
ஆனால்
பிரம்மாவிடம்
இந்த
வரவேற்புக்கான
எதிர்
பிரதிபலிப்பு
எதுவும்
இருக்கவில்லை.
"நன்றி
இதயநிலா"
|