படியளக்கின்றார்....               

இந்திரப்பர்வத்தின் உச்சியிலே இருந்தவாறே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் உலக மாதாவாகிய அன்னை பார்வதிதேவி. "இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் எம் இறைவன் எவ்வாறோ படியளந்து விடுகின்றாரே. அவருடைய அருளாற்றல்தான் என்ன சக்தி வாய்ந்தது" என்பதுதான் அந்த சிந்தனை. உலகின் எல்லாவுயிர்களுக்கும் தலைவனாகிய நம் இறைவனின் இச்செயற்பாட்டை சோதிக்க விரும்பினாள் அன்னை பார்வதிதேவி.
ஒருநாள் இறைவனுக்கத் தெரியாமல் ஒரு பூச்சியைப் பிடித்து தன் கமண்டலத்துக்கள் அடைத்து வைத்து விட்டு. "இந்தப் ஜீவராசிக்கு நம் இறைவன் எவ்வாறு இன்று படியளக்கின்றார் என்று பார்த்துவிடுவோம்" என கங்கணம் கட்டிக் கொண்டாள் அன்னை பார்வதி.அன்றைய நாள் மாலைநேரம் வந்தது. இருள் சூழ ஆரம்பித்தது. தனது கடமையாகிய இவ்வுலக ஜிவராசிகளுக்கு படியளக்கும் செயற்பாட்டினை இனிதே நிறைவேற்றிய பெருமிதத்தோடு தியானத்தில் அமர்ந்திருந்தார் எமது சந்திரசேகரப் பெருமான். "இவரை இன்று ஒரு கை பார்த்துவிட வேண்டுமென்ற ஒரு வைராக்கியத்துடன் இறையனாரின் அருகில் வந்து சேர்ந்தாள் உலக மாதாவாகிய அன்னை பார்வதி தேவி. கையில் கமண்டலம் முகத்தில் ஏளனப்புன்னகை எதையோ சாதித்துவிட்ட பெருமையுடன் இறைவனிடம் கதையைத் தொடுத்தாள் அன்னை. " உங்கள் அன்றாட வேலைகளில் ஒன்றான உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் அச்செயற்பாட்டை நீங்கள் பூரணமாக நிறைவு செய்தீர்களா? எனக் கேட்ட அன்னையின் முகத்தை இறைவன் நிமிர்ந்து பார்த்தார்.பார்வதியின் இக்கேள்வியில் ஏதோ ஓர் அர்த்தம் மறைந்திரப்பதை தெரிந்து கொண்டாலும் தன் பணி இனிதே நிறைவெய்தியதாகவே பதிலளித்தார் இறைவன். "நீங்கள் இன்று ஒரு உயிருக்கு படியளக்கத் தவறிவிட்டீர்கள்." என்றாள் அன்னை பார்வதி. "இல்லையே எல்லாவுயிர்களுக்கும் தானே இன்று நான் படியளந்தேன்" என பார்வதியின் கூற்றை மறுத்த இறைவனுக்கு " நீங்கள் இன்று படியளக்கத் தவறியதால் இந்தக்கமண்டலத்துக்குள் ஒரு ஜீவன் இறந்து விட்டது.." என்ற வாறே கமண்டலத்தை திறந்து இறைவனுக்குக் காட்டினாள். இறைவன் எட்டிப்பார்த்த பின்பு " இல்லையே அந்த ஜீவன் உயிருடன் தானே இருக்கிறது " என்றார். இதைக்கண்ட அன்னை ஆச்சரியம் அடைந்தாள்."எப்படி கமண்டலத்துக்குள் ஒருநாள் முழுவதும் இருந்த இந்த ஜீவனுக்கு உங்களால் படியளக்க முடிந்தது?" என்று வியப்போடு இறைவனைக் கேட்டாள்.இதற்கு இறைவன் சொன்ன பதில் பார்வதியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. " வேறு ஒன்றுமில்லை நீ எப்போது இந்தக் கமண்டலத்தைத் திறந்தாயோ அப்போதே அதற்குப் படியளந்த

---------------------------------------------------------

        :..:    பெரியவன் யார்  .:.

              ஒரு சமயம் பிரபஞ்ச உயிர்களை பிரசவிக்கின்ற பிரம்மாவிற்கு தன் படைப்புத் தொழிலின் மீது ஏற்பட்ட அதீத கர்வம் காரணமாக தனக்குள்ளே ஆணவம் பற்றிக்கொண்டது. உலகிலே மிக முக்கியமாக மூன்று தொழில்களையும் செய்கின்ற மும்மூர்த்திகளிலும் நானே பெரியவன் என இறுமாப்பு ஏற்பட்டுவிட்டது. இதை எவ்வாறு நிறுவுவது என்றவாறே தன் மனைவியாகி அன்னை சரஸ்வதிதேவியிடம் வந்தடைந்தார் பிரமா. பிரம்மாவின் கண்களில் ஆணவத்தீ பற்றி எரிவதை புரிந்து கொண்டாலும் அதைக்காட்டிக்கொள்ளாத தேவி அவரிடம் " என்ன என்றும் இல்லாத வித்தியாசம் ஒன்று உங்களில் இன்று தென்படுகின்றதே என்ன காரணம் ? " எனக்கேட்டுக்கொண்டாள். சீறிடும் வார்த்தைகள் பிரமாவிடம் இருந்து புறப்பட்டன. இது முன்பே எதிர்பார்த்ததது ஆகையால் நிதானமாகவே அதை செவிமடுத்தாள் தேவி.

             " இந்த உலகத்திலே படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை செய்கின்ற மும் முர்த்திகளில் யார் பெரியவன் என்று நீ நினைக்கின்றாய் ?" பிரம்மா தேவியிடம் இவ்வினாவை தொடுத்தார். உடனே தேவி " அதிலென்ன சந்தேகம் இவ்வுலக நியதியாகிய அத்தொழில்களில் படைத்தலையும் அழித்தலையும் இருந்த இடத்தில் இருந்தவாறே செய்து கொள்ள முடியும் ஆனால் காத்தல் அப்படி இல்லை என்நேரமும் ஜீவராசிகளுடன் ஒன்றித்திருந்து செய்யவேண்டிய அந்த சிரமமான தொழிலை செய்கின்ற விஷ்னுதான் பெரியவர்" என்றாள் தேவி. ி.

        பிரம்மாவின் கோபம் இருமடங்கானது " என்ன படைத்தலை விட காத்தல் அவ்வளவு பெரிய காரியமா ? நான் படைக்காவிடில் அவரால் எப்படி காக்க முடியும்? " வார்த்தைகள் வீறிட்டன. தேவி எதுவும் பேசாது மௌனித்துப்போனாள். " உன்னிடம் எனக்கு என்ன பேச்சு நான் இப்பொழுதே விஷ்னுவை சந்திக்கிறேன் என்றவாறே விஷ்னுவிடம் புறப்பட்டார் பிரம்மா. பாற்கடலில் துயின்றுகொண்டிருந்த விஷ்னு பகவான் பிரம்மாவை கண்டதும் எழுந்து வரவேற்றார். ஆனால் பிரம்மாவிடம் இந்த வரவேற்புக்கான எதிர் பிரதிபலிப்பு எதுவும் இருக்கவில்லை.

"நன்றி இதயநிலா"

                      :..: நேர்மையின் செல்வன்  .:.

          இந்தியாவிலே ஒரு சிறிய ஊர் பண்டரிபுரம் என்பது அங்கே கோபாலகிரி என்ற இடத்திலே சந்திராவளி என்பவள் ஆண்டாளைப்போல் ! கிருஷ்ணனையே திருமணம் புரிந்துகொள்ளவேண்டுமென்று மிக வைராக்கியமாக இருந்தாள். அது நடக்கக்கூடிய காரியமா? என ஊரார் பேசிக்கொண்டனர் இப்படியே சந்திராவளிக்கு வயது முப்பது ஆனது அவள் தன் கடும் தவத்தினை கலைத்தக்கொள்ளவே இல்லை. கிரஷ்ணனைத்தவிர வேறு நினைவின்றி அவன் பெயரையே உச்சரித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள் தவம் பலித்தது அவள்முன் சிவபெருமான் தோன்றினார்

 
"               சந்திராவளி உன் கடும் தவம் கண்டு மெச்சினோம். உனக்குவேண்டிய வரத்தைக்கேட்டக்கொள்" என்றார். "ஐயனே எனது தவம் கிருஷ்ணனைக் குறித்தே அவரைக் கணவனான அடையவே இப்படித்தவம் இயற்றுகிறேன்" என்றாள் சந்திராவளி. "பெண்னே அது நடக்காது ஏனெனில் கிருஷ்ணன் புத்தனாக அவதரித்து மௌனியாகிவிட்டார். ருக்மினி வேறு அவரை இணைபிரியாது இருக்கிறாள். அகவே நீ என்னைத்திருமணம் செய்து கொள் !" என்றார் சிவன். "ஐயா இது என்ன அநியாயம் நான் கிருஷ்ணனையே கணவனாக வரிந்து கொண்டுவிட்டேன். பிறர் மனைவியை இச்சிப்பது முறையா? அத்திரி முணிவரின் மனைவி அனுசூயாவின் கற்பை சோதித்துப் பட்டது போதாதா? என்னிலும் வேறு உங்கள் சோதனையா?" என்று தான் கிருஷ்ணன் மீது கொண்ட அன்பின் வண்மையை நிறுத்தி நின்றாள்.

               திடீரென சிவன் உருவத்தில் நின்ற கிருஷ்ணர் கிருஷ்ணராகக் காட்சிகொடுத்தார்." சந்திராவளியே உன் கற்பின் சிறப்பை அறியவே அவ்வுருவில் வந்தேன்" என்றார் கிருஷ்ணர். இந்தச்சமையத்தில் அங்கு ருக்மினி தோன்றினாள். நடந்ததையும் நடக்க இருப்பதையும் உணர்ந்துகொண்ட அவள் கிருஷ்ணன் மீது அளவுகடந்த கோபம் கொண்டாள். உடனேயே அவ்விடத்தைவிட்டு அகன்றோடினாள். கோபமிகுதியால் அகன்ற ருக்மினிதேவியைத்தேடி கிருஷ்ணபரமாத்மா புறப்பட்டார். இவ்வாறு தேடிக்கொண்டே சந்திரபாகா நதிக்கரையை அடைந்தார் கிருஷ்ணர். அங்கே ; தனது தாய்தந்தையருக்குச் சேவை செய்துகொண்டிருந்த

 
 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Copyright © 2000 - 2007 by Tamilgood.com . All Rights Reserved.