- தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்.
- யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.
- யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது.
- தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ்.
- பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்.
- 'விடுதலைப்புலிகள்' முதலாவது இதழ் ( குரல்- 1) 15.03.1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
- அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.
- தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு.
பொது அறிவு
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
1.டச்சு கயானா --- சுரினாம்.
2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா --- எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் --- கானா
5.பசுட்டோலாந்து --- லெசதொ
6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா
7.வட ரொடீஷியா --- ஜாம்பியா
8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்
11.சாயிர் --- காங்கோ
13.சோவியத்யூனியன் --- ரஷ்யா
14.பர்மா --- மியான்மர்
15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்
16.சிலோன் --- ஸ்ரீலங்கா
17.கம்பூச்சியா --- கம்போடியா
18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்
19.மெஸமடோமியா --- ஈராக்
20.சயாம் --- தாய்லாந்து
21.பார்மோஸ --- தைவான்
22.ஹாலந்து --- நெதர்லாந்து
23.மலாவாய் --- நியூசிலாந்து
24.மலகாஸி --- மடகாஸ்கர்
25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்
26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா
27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்
28.அப்பர் பெரு --- பொலிவியா
29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd
பண்டித ஞா.தேவநேயனார்,பி.ஓ.எல்.பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித்
தமிழ்ச்சொல் ஆராய்ச்சிபற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை
நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத்திலே தலைமைக் கண்காணியர் தவத்திரு திரஞ்சு (
Trench) எழுதிய `சொல்லாராய்ச்சி`, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழுதிய `
மொழியறிவியல்` பேராசிரியர் சாய்சு எழுதிய ` ஒப்பியல் மொழிநூல்` முதலிய ஆங்கில
நூல்களை யாமே பெருவிருப்புப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில்
தமிழ்ச்சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம்.தமிழ்ப் பேரறிஞர்கட்குப்
புலப்படாமல் மறைந்துகிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு
பண்டாரகர் கால்ட்டுவெல் எழுத்திய `திராவிட மொழிகளின் ஒப்பியலாய்வு` நூலால்
புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில்
செய்த்ததொரு முயற்சியாத்தலால் தமிழ்ச்சொற்களையெல்லாம் விடாமல் நிறைவாக
எடுத்தாராய்ந்துள்ளனர் என்று எதிர்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டு
மென்று எம்மைத்த் தூண்டியது.எனவே `ஞானசாகரம்`( அறிவுக்கடல் ) என்னும் எம்முடைய
இதழில் குதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம்.
ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய
மொழியாராய்ச்சித் துறையில்தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர்
யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக்கூடுமா என்று எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர்தாம் எகிபதிய
மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு
அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித்துறை மிகவும் விரிவும் ஆழமு முடையதாதலால்
பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில்
மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த
நேரத்தில் திரு.தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முர்றும் நிறைவேற்றியது
கண்டு பெருமகிழ்வுற்றேம்.அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து
எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில்
திரு.தேவநேயனார் ஒப்பற்ற தனித்திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர்
அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம். மேலும் திரு.தேவநேயனார் பதியச்
சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு
விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப்
பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில்
ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப்
பணியில் அமர்த்தும் எந்த நிலையத்துக்கும் அவரால் பேரும் புகழும் கிடைக்கப்பெறும்
என்று யாம் முழு நம்பிக்கையோடு கூறுகின்றேம்.








